Sunday, November 26, 2017

காக்கைதீவு, பொம்மைவெளிப் பகுதியில் 10 துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்கள் மீட்பு!

SHARE

யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில்  போடப்பட்டிருந்த பழைய துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் சில யாழ்ப்பாணம் பொலிஸாரால் இன்று(26) காலை மீட்கப்பட்டன.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அவை மீட்கப்பட்டன.

இவ்வாயுதங்கள்  எப்போது போடப்பட்டன என்பது தெரியாதுள்ளதுடன்  நீதிமன்றின் அனுமதியுடன் சிறப்பு அதிரடிப் படையினர் ஊடாக அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன' என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்  மீட்கப்பட்ட ஆயுதங்களில் ஏ.கே. ரி 56 – 2 ரக துப்பாக்கிகள் 10  மற்றும் 6 எம்.எம். மோட்டார் குண்டுகள், ரி.56 ரவைகள் உட்பட  கைக்குண்டுகள் வாள்கள், மகசின் 4 கைக்குண்டு 2,  ஆகியன காணப்படுவதாகவும், அவை மிகவும் பழுதடைந்த நிலையில்உள்ளது.

எனவே, இவை நீண்ட காலத்திற்கு முன்னர் அங்கு கைவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.






SHARE