Monday, November 20, 2017

யாழில் 38 கிலோ கஞ்சா மீட்பு – மூவர் கைது!

SHARE

யாழில் 38 கிலோ கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் , மூவர் காவல்துறையினரினால்  கைது செய்யப்பட்டு உள்ளனர்.  கொடிகாமம் பகுதியில் 36 கிலோ கஞ்சா போதை பொருளை உடமையில் வைத்திருந்த இருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு காவல்துறையினரினால்  கைது செய்யப்பட்டனர்.

காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டதுடன் , அவர்களிடம் இருந்து 36 கிலோ கஞ்சாவையும் மீட்டனர்.  கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த  காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதேவேளை யாழ்ப்பாண விசேட குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் , வடமராட்சி கிழக்கில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை கடத்தியவரை கைது செய்தனர்.

வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியை சேர்ந்த நபர் யாழில் கஞ்சாவை விற்பனை செய்ய கொண்டு வரும் போதே காவல்துறையினரினால்   கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 2  கிலோ கஞ்சா மீட்கப்பட்டு உள்ளது. அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் காவல்துறையினர் அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.



SHARE