Thursday, November 16, 2017

யாழில் வாள்களுடன் நடமாடியதாக 3 இளைஞர்கள் கைது!

SHARE

வாள்களுடன் நடமாடிய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டனர் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் 22 தொடக்கம் 24 வயதுகளை உடையவர்கள். கொக்குவில், கோப்பாய் மற்றும் மானிப்பாயைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். அவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் உள்ளன. மூவரும் தேடப்பட்டு வந்தநிலையில் இன்று கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள்  என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
SHARE