Sunday, November 19, 2017

மன்னாரில் 5 இடங்களில் பிள்ளையார் சிலைகள் உடைக்கப்பட்ட மற்றும் திருடப்பட்ட சம்பவங்கள் பதிவு!

SHARE

பிள்ளையார் சிலைகள் உடைக்கப்பட்ட மற்றும் திருடப்பட்ட பல்வேறு சம்பவங்கள் மன்னார் மாவட்டத்தின் ஐந்து இடங்களில் பதிவாகியுள்ளன.

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியின், தள்ளாடி பகுதியில் வீதியோரத்தில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 17ஆம் திகதி இந்த பிள்ளையார் சிலை மூன்றாவது தடவையாக சேதமாக்கப்பட்ட நிலையில், மீண்டும் இந்த சிலை சேதமாக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் சேதமாக்கப்பட்ட சிலையை புனரமைத்து பொதுமக்கள் மீண்டும் அதே இடத்தில் வைத்தனர்.

இந்த நிலையில், பிள்ளையார் சிலையை இன்று (18) அதிகாலை அடையாளம் தெரியாத சிலர் சேதப்படுத்தியுள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு அருகிலிருந்த பிள்ளையார் சிலைகளும் சேதமாக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஆண்டான்குளம் சந்தியில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை திருடப்பட்டுள்ளது.

உயிலங்குளம் – பள்ளமடு பிரதான வீதியின் வண்ணாகுளம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையும் திருடப்பட்டுள்ளது.

இதேவேளை, மன்னார் – யாழ். பிரதான வீதியின் நாயாற்று வழி சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையும்
மூன்றாவது தடவையாக சேதப்படுத்தப்பட்டு திருடப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.








SHARE