Wednesday, November 22, 2017

இன்றைய சினிமா சிந்தனை!

SHARE

சினிமாவிலிருந்து கேமராவைப் பிரிக்க முடியாததைப் போல Jeanne Moreau-யும் பிரிக்க முடியாது. அற்புதமான நடிப்பு திறம் கொண்ட நடிகை Jeanne Moreau கடந்த 1947ஆம் ஆண்டு முதல் திரைத்துறையில் இடம்பெற்றவர். Jules and Jim, Elevator to the Gallows, The Bride Wore Black, The Immortal Story போன்ற திரைப்படங்களில் சிறந்த நடிப்புகளை வெளிப்படுத்தி உள்ள இவர், பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி சுமார் பத்துக்கும் மேற்பட்ட வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை பெற்றுள்ளார். இவர் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 31, 2017) இயற்கை எய்தினார். இவரது மறைவுக்குத் திரைத்துறையினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பு ரசிகர்களும் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்தனர். இவர் கூறிய சினிமா குறித்த சிந்தனை வரிகள் கீழே...

என்னுடன் நான் எப்போதுமே முரண்படுவதே இல்லை. நான் செய்ய விரும்புவது எதுவாக இருந்தாலும் அதைச் செய்கிறேன், எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல்.
SHARE