Tuesday, November 14, 2017

இன்றைய சினிமா சிந்தனை!

SHARE

நடைமுறைக்குச் சாத்தியமற்ற சிலவற்றை பிரமாண்டங்களுடன் சேர்த்து திரைப்படங்களாக வெளியிடும்போது மக்கள் அதை ஒருவித வியப்பில் காண்பது எப்போதும் நடைபெறும் ஒன்று. ஆனால், வாழ்க்கையுடன் ஒன்றி செல்லும் சில நிகழ்வுகளை நகைச்சுவைக் கலந்து திரைப்படமாக இயக்கி வெற்றிகண்ட இயக்குநர் Tom Shadyac. அவர் இயற்றிய The Nutty Professor, Bruce Almighty, i am documentary, Evan Almighty, Patch Adams ஆகிய திரைப்படங்கள் அனைத்தும் நகைச்சுவை என்ற ஒன்றினை மையமாகக் கொண்டும், அதிலும் ஏதேனும் ஒரு கருத்தினை வைத்தும் வெளியாகும் என்பதால் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் எப்போதும் உண்டு. இவரின் சினிமா பற்றிய சிந்தனை வரிகள் கீழே...

சிரிப்பு என்பது புனிதமான செயல். நான் மக்களின் ஹீரோவாக இருக்க விரும்பவில்லை. அவர்களின் சகோதரனாகவோ, குடும்பத்தில் ஒருவராகவோ இருக்க விரும்புகிறேன்.
SHARE