Friday, November 17, 2017

ஹட்டனின் தீ விபத்து - மூன்று வீடுகள் எரிந்து நாசம்!

SHARE

ஹட்டன் செனன் தோட்ட குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் கே.ஜி குரங்கு மலை பிரிவில் இன்று வியாழக்கிழமை  காலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட தீயணைப்பு பிரிவினர் சில மணிநேர போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்தில் உயிர்சேதங்களோ காயமோ ஏற்படாத போதிலும் உடமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்சார ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸ் தரப்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.




SHARE