Tuesday, November 14, 2017

மலேசியாவின் ‘பேசு தமிழா பேசு’ பேச்சுப் போட்டியில் இலங்கை மாணவன் முதலிடம்!

SHARE

பல்கலைக்கழக மாணவர்களுக்கான ‘பேசு தமிழா பேசு’ எனும் அனைத்துலக பேச்சுப் போட்டியில் கண்டி பேராதனைப் பல்கலைக்கழக மாணவன் சாருஜன் மெய்யழகன் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

மேற்படி போட்டி நிகழ்வுகள் நேற்றையதினம்  ஞாயிற்றுக்கிழமை  கொழும்பு 07, ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தையில் அமைந்துள்ள நடா மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு நடைபெற்றது.

இந்த பேச்சு போட்டியில் போட்டியாளர்கள் இக்கால பெண்கள் திருமணத்திற்கு கணவரைத் தெரிவு செய்யும் போது கவனத்தில் கொள்வது பணத்தையா? கல்வியையா? பண்பைபயா? அழகையா? என்ற தலைப்பில் நான்கு பேர் வாதிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், மலேசிய கல்வித் துணை அமைச்சர் டத்தோ பி.கமலநாதன், ஆஸ்ட்ரோ நிகழ்ச்சியின் நிர்வாக குழும இயக்குனர் டாக்டர் ராஜமணி செல்லமுத்து, உலகப் புகழ் அறிவிப்பாளர் அப்துல் ஹமீட், வணக்கம் மலேசியாவின் நிர்வாக இயக்குனர் தியாகராஜன் முத்துசாமி, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அரசரத்தினம், உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயா செல்வகுமார். உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.




SHARE