Thursday, November 23, 2017

கோப்பாய் ஆசிரிய கலாசாலை முன்பாக ஆசிரிய மாணவர்கள் கவனயீர்ப்பு!

SHARE

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய மாணவர்கள், இன்று  வியாழக்கிழமை காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கோப்பாய் ஆசிரியர் கலாசாலை வளாகத்திக்கு முன்பாக இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அடிப்படைச் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரித்தல், ஆசிரிய உதவியாளர்களை தரம் 3-2இற்குள் உள்ளீர்த்தல் போன்ற கோரிக்கைகளை ஆசிரிய மாணவர்கள் முன்வைத்தனர்.

ஆசிரிய மாணவர்களின் இப்போராட்டம், நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.SHARE