Tuesday, November 21, 2017

மகன் மோட்டார் சைக்கிள் வாங்கிய கனம் தந்தை உயிர் பிரிந்தார் - யாழில் சம்பவம்!

SHARE

மகன் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளில் பயணிக்க வேண்டும் என்ற ஆவலுடன் தயாராகிக்கொண்டிருந்த தந்தை நெஞ்சுவலி காரணமாக அடுத்த கனமே உயிரிழந்த சம்பவம் நேற்றுமுன்தினம்(18) இடம்பெற்றுள்ளது.

பரமேஸ்வரி அம்மன் கோயிலடி கோப்பாய் தெற்கு பகுதியினை சேர்ந்த கிருஸ்ணன் சந்திரசேகரன் வயது(63) என்ற முதியவரே உயிரிழந்தவர் ஆவார். மகன் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளில் பயணிக்க வேண்டும் உறவினர்கள் வீட்டுக்கும் போக வேண்டும் என கூறி முகம் கைகால் கழுவி விட்டு புறப்பட தயாராகிக்கொண்டிருந்துவிட்டு கதிரையில் உட்கார்ந்த நிலையில் உயிர் பிரிந்தது.
பேச்சு மூச்சு அற்ற நிலையில் இருந்த முதியவரை மகன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து வந்து அனுமதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறினர்.

வைத்தியசாலையில் இடம்பெற்ற உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மகனின் மோட்டார் சைக்கிளில் பயணிக்கவேண்டும் என்ற ஆவலுடன் இருந்த முதியவரின் ஆசை நிறைவேறாமல் உயிரிழந்தது. குடும்பத்தில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
SHARE