Sunday, November 26, 2017

கிளிநொச்சியில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர்!

SHARE

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று காலை மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது  கிளிநொச்சியில் அமைந்துள்ள  அவர்களது கட்சியின்  மாவட்ட அலுவலகத்தில்  இணைப்பாளர் விமல் தலைமயில் இடம்பெற்ற  இன் நிகழ்வில்
மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டதுடன்  மாவீரர்களின் பொது திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி  இடம்பெற்றது அத்துடன்  தெரிவுசெய்யப்பட்ட  சுமார் நூற்றிப் பத்து  மாவீரர் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதியும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது  இன் நிகழ்வில்   கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இணைப்பாளர் ஜெகா ,கட்சி உறுப்பினர்கள், மாவீரர்களின் பெற்றோர் மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.







SHARE