Monday, November 27, 2017

சாவகச்சேரியில் விபத்து: இருவர் உயிரிழப்பு!

SHARE

யாழ்.சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற சொகுசு பேரூந்து மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

சாவகச்சேரி நுணாவில் பகுதியில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை  இரவு 9.30 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நுணாவிலை சேர்ந்த 35 வயதுடைய யோ.சபேஸ்குமார் மற்றும் அதே இடத்தைச் சேர்ந்த 34 வயதுடைய க.மோகன் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு பேரூந்தும், சாவகச்சேரியில் இருந்து நுணாவில் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


SHARE