Friday, November 24, 2017

சிறுமி மீது டிப்பர் மோதி விபத்து: காஞ்சிறங்குடாவில் அமைதியின்மை!

SHARE

கொக்கட்டிச்சோலை  காஞ்சிரங்குடாபகுதியில் மண் ஏற்றிச்சென்ற பாரவூர்தி சிறுமி ஒருவர் மீது மோதியதால் சிறுமி படுகாயமடைந்த நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற விபத்தினை தொடர்ந்து அப்பிரதேச மக்களினால் விபத்தினை ஏற்படுத்திய பாரவூர்தி வாகனம் தாக்குதலுக்குள்ளான நிலையில் அப்பகுதிக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது பொலிஸாருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன் வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் மேலதி பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து கலகமடக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் விபத்தினை ஏற்படுத்திய வாகனத்திற்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்ற நிலைமை காணப்படுவதுடன் பதற்றத்தினை தணிக்கும் வகையில் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.







SHARE