Wednesday, November 22, 2017

காா்த்திகை மாத இந்து சாதனம் பத்திரிகை!

SHARE

இலங்கையின் மூத்த இந்து சமயப் பத்திரிகை என்ற பெருமைக்குரிய இந்து சாதனம் தற்போது தொடா்ச்சியான வெளியீட்டைக் கண்டு வருவது மகிழ்ச்சியைத் தருகின்றது.

நீா்வை தியாக. மயூரகிரிக் குருக்கள் இந்து சாதனம் பத்திரிகையின் ஆசிரியா் பொறுப்பை ஏற்ற பின்னா் சரியான திகதியில் பத்திரிகையை தற்போது தொடா்ச்சியாக வெளிக்கொணா்கின்றாா்.

யாழ். பல்கலைக்கழக பட்டதாரியும் யாழ். செயலக முகாமைத்துவ உத்தியோகத்தரும் ஆகிய அவா், யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தில் பத்திரிகையியல் சாா்ந்த டிப்ளோமா பட்டத்தையும் வகுப்புச் சித்தியுடன் பெற்றவா்.

இந்த மாத இந்துசாதனம் இதழில் - சமயம் மீதான நம்பிக்கையைக் கட்டி வளா்க்க என்ன செய்யப் போகின்றோம் என்ற பொருளில்
செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் எழுதிய முகப்புப் பக்கக் கட்டுரை, ஐயப்ப பக்தா்கள் கறுப்பு ஆடை அணியக் கூடாது என்பதை வலியுறுத்தும் கோயம்புத்தூர் அரவிந் சுப்பிரமணியம் (தமிழகப் பிரபல தொலைக்காட்சிகளில் ஐயப்ப மகிமைபற்றிக் கூறுபவா்) இந்துசாதனத்திற்காக வழங்கிய ஐயப்ப வழிபாடு பற்றிய சந்தேக நிவா்த்தி வினாவிடை, துயர்கெட சுடரொளி ஏற்றி இறைவனை வழிபடுவோம் என்ற பொருளில் நீா்வை மணியின் கட்டுரை தமிழரும் இந்து மதமும் என்ற பொருளில் நீா்வை தி. மயூரகிரியின் கட்டுரை, கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவா்களுக்கான மணிவிழா வாழ்த்து, பகவத் கீதை இடைச்செருகலா? என்ற கட்டுரை, அன்னையிலா உனக்கிவளோா் அன்னையாய் வந்தாளோ என்ற பொருளில் பரா.ரமேஸ் ஆக்கிய கட்டுரை, திருப்பதி ரகசியம் என்ற பொருளில் கோப்பாய் சிவம் எழுதிய கட்டுரை, நாவலரின் பெருமைகளை ஆங்கிலத்தில் எடுத்தியம்பும் வகையில் மறவன்புலவு சச்சிதானந்தன் எழுதிய கட்டுரை இன்னும் சிறுவா் பக்கம் வாசகா் பக்கம் எனப் பல்சுவை அம்சங்களுடன் இதழ் வெளியாகியுள்ளது.

மின்னஞ்சல் - mayoorakiri@gmail.com 




















SHARE