Monday, January 29, 2018

28 வருடங்களின் பின் தையிட்டி தூது குடை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் தைப்பூச பொங்கல்!

SHARE

28 வருடங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட, தையிட்டி குருந்து வீதியில் அமைந்துள்ள தூது குடை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் நாளை மறுதினம் 31 ஆம் திகதி புதன்கிழமை பகல் 12.00 மணியளவில் தைப்பூச நாளன்று பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இதனையடுத்து குறித்த ஆலயத்தில் நித்தியபூசையுடன் வழிபாடுகள் காலை 10.30 மணிக்கு தினமும் இடம்பெறவுள்ளது.

பொங்கல் விழாவையும், மீண்டும் வழிபாடுகள் ஆரம்பிக்க வசதியாக இன்று  ஞாயிற்றுக்கிழமை அவ்வூர் பொதுமக்களால் கோயிலில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.

28 வருடங்களின் பின்னர், முதன்முறையாக தைப்பூச தினத்தன்று நடைபெறவுள்ள பூசையில் அனைவரும் கலந்துகொண்டு, அம்பாளின் அருளை பெற்றுக்கொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர்.

SHARE