Thursday, January 25, 2018

வங்கதேசத்தை அடக்கியது ஹத்துருவின் இலங்கைப் படை!

SHARE

பங்களாதேஷில் இடம்பெற்றுவரும் முக்கோணத் தொடரில் இலங்கை, பங்களாதேஷ், சிம்பாப்வே ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

இப் போட்டித் தொடரின் 6 ஆவதும் முக்கியமானதுமான போட்டி இன்று டாக்காவில் இடம்பெற்று வருகின்றது.

இப் போட்டியில் இறுதிப் போட்டிக்குள் பங்களாதேஷ் அணி சென்றுள்ள நிலையில் அடுத்ததாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணி எது என்பதற்கான போட்டியாக இன்றைய போட்டி அமைந்துள்ளது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடக்களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு இலங்கை பந்துவீச்சாளர்கள் சிம்பசொப்பனமாகத் திகழ 82 ஓட்டங்களுக்குள் பங்களாதேஷின் ஆட்டம் அடங்கியது.

இந்நிலையில் 83 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன்
களமிறங்கிய  இலங்கை அணி விக்கட் இழப்பின்றி 11.5 ஓவர்களில் 83 ஓட்ட்ங்களுடன் வெற்றியை தனதாக்கியது.

SHARE