Friday, January 26, 2018

முதன்முறையாக இணையும் கார்த்தி - ஹாரிஸ் ஜெயராஜ்.

SHARE

கார்த்தி - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி முதன்முறையாக இணைய இருக்கிறது. ஆர்.கண்ணனிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் ரஜத். இவர் கார்த்தியை வைத்து இயக்கி, இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். இந்தப் படத்தில், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் ஹீரோயினாக நடித்த ரகுல் ப்ரீத்சிங் மறுபடியும் கார்த்தி ஜோடியாக நடிக்கிறார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கார்த்தி சினிமாவுக்கு வந்து 10 வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், கார்த்தி படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பது இதுதான் முதல்முறை.

தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்தப் படத்தில் விவசாயியாக நடிக்கும் கார்த்தி ஜோடியாக சயிஷா, பிரியா பவானிசங்கர் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இந்தப் படம் முடிந்தபிறகு ரஜத் இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி.

SHARE