Friday, January 26, 2018

யாழில் இந்திய குடியரசு தின நிகழ்வு!

SHARE

இந்தியாவின் 69ஆவது குடியரசு தின நிகழ்வு இன்று வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு யாழ். கச்சேரி – நல்லூர் வீதியில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் இன்று காலை 9.00 மணியளவில் நடைபெற்றது.

இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டு யாழ் இந்திய துணைத்தூதுவர் ஆறுமுகம் நடராஜன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தியதுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் குடியரசு தின செய்தியை வாசித்தார் .

இந்திய பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் விதமான கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள், சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் , இந்திய துணைத் தூதுவரின் துணைவியார் சாந்தி நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்




































SHARE