Friday, January 19, 2018

விஜய்யின் அதிரடித் தொடக்கம்: தீபாவளி டார்கெட்!

SHARE

விஜய் ரசிகர்களின் காத்திருப்புக்கு ஒரு வழியாகக் காலம் கனிந்துவிட்டது.

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. பட பூஜையுடன் இந்தப் படத்தை விஜய் கிளாப் போர்டு அடித்து தொடங்கிவைத்திருக்கிறார். இந்தத் தகவலை உறுதிபடுத்த முயன்றபோது படக் குழுவினர் எவரையும் பிடிக்க முடியவில்லை. அப்படியும் ஒருவர் கிடைத்தபோது விசாரித்ததில், “ரிலீஸ் தேதியையே அறிவித்துவிட்டார்” என்று ‘டேக் டைவர்ஷன்’ கொடுத்தார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் அக்கவுண்டில் ஹேப்பி தீபாவளி என்று ட்வீட் செய்திருக்கிறார். அவர் மட்டுமல்ல, அனைவருக்குமே தெரியும் இப்போது தீபாவளி இல்லை என்பது. தீபாவளிக்கு விஜய்-முருகதாஸ் இணையும் படத்தை ரிலீஸ் செய்யவிருப்பதையே அவர் விளையாட்டாகக் குறிப்பிட்டிருக்கிறார் என்பது கண்டுபிடிக்க முடியாத அளவுக்குப் பெரிய சஸ்பென்ஸ் இல்லை.

2018ஆம் ஆண்டு தீபாவளிக்கு விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் மூன்றாவது திரைப்படம் ரிலீஸாகிறது என்பது தெரியவந்த சில நிமிடங்களில், முருகதாஸ், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டவர்களை நிற்கவைத்து விஜய் கிளாப் போர்டு அடிக்கும் புகைப்படம் ரிலீஸாகியிருக்கிறது.
SHARE