Monday, January 29, 2018

ஆபத்தில் உதவும் ஆப்பிள்!

SHARE

ஆபத்தில் இருக்கும் பயனர்களுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றினை அதன் புதிய வெர்ஷன் 11.3-ல் வழங்கி உள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும் பயனர்கள் ஏதேனும் ஒரு அவசர சூழலில் தங்களின் இடத்தை பிற பயனர்களுடன் சேர் செய்து கொள்ளும் வசதியை தற்போது புதிதாக வெளியிட்டுள்ள 11.3 ஐ.ஓஎஸ்-ல் இணைத்துள்ளது. அமெரிக்காவில் இந்த வசதியை இன்னும்அறிமுகம் செய்யாத நிலையில் நியூசிலாந்து, இங்கிலாந்து, பெல்ஜியம், ஸ்வீடன் மற்றும் லித்துவேனியா போன்ற நாடுகளில் மட்டும் நடைமுறைப்படுத்தி உள்ளது. இதற்கு முன்னர் sos வசதி மூலம் பயனர்கள் அவர்களை அவசர கால்களை மேற்கொள்ளும் வசதி உபயோகத்தில் இருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த வசதி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பயனர்கள் அவசர தேவையின் பொழுது குறிப்பிட்ட பயனர்களுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் பயனரின் லொக்கேஷன் GPS மூலம் கண்டறியப்பட்டு, மற்ற பயனருக்கு தெரிவிக்கப்படும்.

அதுமட்டுமன்றி அவசர உதவி எண்களுக்கு அழைப்பு விடும் பொழுது அவர்களது GPS தகவல்களை பகிர்ந்து கொள்ள இந்த அப்டேட் உதவுகிறது. அதேபோல் அந்த பயனர் அவர்கள் உடல்நிலை குறித்த தகவல்களை மொபைலில் பதிவிட்டு வைத்துக் கொள்ளலாம். அந்த தகவல்களையும் அவசர உதவியின் பொழுது மருத்துவக் குழுவிற்கு அனுப்ப இதில் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.
SHARE