நிமிர் - திரை விமர்சனம்!


சந்தோஷ் டி.குருவில்லா தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் ,நமீதா பிரமோத் ஜோடி நடிக்க, பிரபல இயக்குனர்பிரியதர்ஷன் இயக்கத்தில் வந்திருக்கும் லவ், காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் படம் தான் "நிமிர்".

தன் போட்டோகிராபர் அப்பா மகேந்திரனுடன் சேர்ந்து நேஷனல் ஸ்டூடியோ எனும் போட்டோ ஸ்டூடியோவை சொந்த ஊரில் நடத்தி வருகிறார் போட்டோகிராபர் உதயநிதி. அவரது ஸ்டூடியோவுக்கு அடுத்ததாக போட்டோ லேமினேஷன் கடை வைத்திருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர்.


இவரிடம் வேலைக்க ுசேர்கிறார் கருணாகரன். உதயநிதியும், அவரது தோழியுமான பார்வதி நாயரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர்.

பார்வதி நாயர் உயர் படிப்புக்காக வெளியூருக்கு செல்கிறார். ஒருநாள் எம்.எஸ்.பாஸ்கருக்கும், ஆட்டோ டிரைவரான செண்ட்ராயனுக்கும் இடையே ஏற்படும் பிரச்சனையில் சென்ராயன், எம்.எஸ்.பாஸ்கரை அடிக்கிறார்.

இதை பார்க்கும் கருணாகரன், செண்ட்ராயனுடன் சண்டைக்கு செல்கிறார். இவர்களது சண்டையை தடுத்து நிறுத்தும் முயற்சியில் உதயநிதி ஈடுபட, திடீரென அதில் மூக்கை நுழைக்கும் சென்ராயனின் நண்பர் சமுத்திரக்கனி, உதயநிதியை அடித்து விடுகிறார்.

பிரச்னையை தடுக்க சென்ற தன்னை அடித்த சமுத்திரக்கனியை, உதயநிதி அடிக்க செல்கிறார். ஆனால் மீண்டும், மீண்டும் அந்த ஸ்பாட்லைட்டிலேயே சமுத்திரக்கனியிடம் அடிவாங்குகிறார்.

பொது இடத்தில் அனைவரது முன்பும் அடிவாங்கி அவமானப்பட்டதால், சமுத்திரக்கனியை திருப்பி அடிக்கும்வரை தான் செருப்பே அணிய மாட்டேன் என்றும் சபதம் செய்கிறார் உதயநிதி.

பின்னர் சிறப்பு பயிற்சிகளையும் எடுத்து, சமுத்திரக்கனியை அடிக்க செல்கிறார். ஆனால் சமுத்திரக்கனி அவரது வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார். இதற்கிடையே பார்வதி நாயருக்கு, வேறு ஒருவருடன் திருமணம் நடக்கிறது.



இதனால், மனம் உடைந்து போகிறார் உதயநிதி. இந்நிலையில், அவரது போட்டோ ஸ்டூடியோவுக்கு வருகிறார் நமீதா பிரமோத். பின்னர் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறுகிறது. ஒருகட்டத்தில் உதயநிதி, தனது அண்ணனை அடிக்க சபதம் செய்திருக்கிறார் என்பது நமீதா பிரமோத்துக்கு தெரிய வருகிறது.

இதையடுத்து அவரது சபதத்தைகை விடும்படி நமீதா கேட்க, அவரது பேச்சை உதயநிதி கேட்டாரா? சமுத்திரக்கனியை அடித்து தனது சபதத்தை நிறைவேற்றினாரா? கனியின் தங்கை நமீதா பிரமோத்தை திருமணம் செய்தாரா? என்பது தான் "நிமிர்" படத்தின் சுவையும், சுவாரஸ்யமுமான மீதிக்கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்!

கதாநாயகர் உதயநிதி ஸ்டாலின், ஒரு சாதாரண போட்டோகிராபர் இளைஞனாக செல்வமாக வாழ்ந்து இருக்கிறார். அவரது முந்தைய படங்களைக் காட்டிலும் இந்த படத்தில் கூடுதல் சிறப்பாக நடித்திருக்கிறார். தன்னால் முடிந்த அளவுக்கு யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வாழ்த்துக்கள்!


நாயகி நமீதா பிரமோத் அவரது பாத்திரத்தில், மனதில் பதியும்படி வந்து ரசிக்க வைத்திருக்கிறார். மற்றொரு நாயகி பார்வதி நாயர் வழக்கம்போல் அவரது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

முரட்டு சமுத்திரக்கனி மற்றும் முதிர்ந்த மகேந்திரனின் கதாபாத்திரங்கள் படத்திற்கு கூடுதல் வலுசேர்க்கும்படியாக இருக்கிறது.

குறிப்பாக மகேந்திரனுக்கு வசனங்கள் அதிகமாக இல்லை என்றாலும், அமைதியாக அவரது கதாபாத்திரத்திற்கு மெருகேற்றியிருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், சண்முகராஜன் மற்றும் கருணாகரனின் கதாபாத்திரங்கள் படத்திற்கு கூடுதல் பலத்தை கூட்டியிருக்கிறது.

என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள், ஒவியப் பதிவாக இருப்பது வசீகரம். அஜனீஷ் லோக்னாத் - தர்புகா சிவா இருவரது இசையில்., "பூவுக்கு தாப்பா எதுக்கு ?", "எப்போதும் உன்னை பார்க்கணும்", "நெஞ்சில் மாமழை" , "மின்மினியா வந்தவளே" உள்ளிட்ட பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசையும் பிரமாதம்.

மலையாளத்தில் ஏற்கனவே வெளியாகிவரவேற்பை பெற்ற "மகேஷிண்ட பிரதிகாரம்" படத்தின் ரீமேக் தான் என்றாலும் படத்தின் திரைக்கதையில் சில பல மாற்றங்களைக் கொண்டு வந்து தமிழுக்கு ஏற்றபடி தொடுத்துக் காட்டியிருக்கிறார் பிரியதர்ஷன்.

அவரது அழகிய இயக்கமும், அதற்கேற்ற திரைக்கதையும் மிகவும் யதார்த்தமாக இருப்பது படத்திற்கு பெரும் பலம்.

ஆக மொத்தத்தில், "நிமிர்' - நிமிர்ந்து நிற்கிறது!
Name

cinema news,725,india,75,Jaffna News,1969,Medical,180,news,4496,Popular,6,Rasi Palan,562,religion news,339,Sports News,326,sri lanka news,3589,Technology,125,Today's cinema,85,world news,304,
ltr
item
Yarldevi News: நிமிர் - திரை விமர்சனம்!
நிமிர் - திரை விமர்சனம்!
https://2.bp.blogspot.com/-bp9zw4q7KqQ/Wm2ipMHiffI/AAAAAAAAQs4/9DkNTxfnxvI82dlf3rjSvcujxnA2QgYJQCLcBGAs/s400/nimir-trailer.jpg
https://2.bp.blogspot.com/-bp9zw4q7KqQ/Wm2ipMHiffI/AAAAAAAAQs4/9DkNTxfnxvI82dlf3rjSvcujxnA2QgYJQCLcBGAs/s72-c/nimir-trailer.jpg
Yarldevi News
http://www.yarldevinews.com/2018/01/blog-post_944.html
http://www.yarldevinews.com/
http://www.yarldevinews.com/
http://www.yarldevinews.com/2018/01/blog-post_944.html
true
1391562164977580846
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy