Wednesday, January 24, 2018

வைஃபை வேகத்தைக் கண்டறிய புதிய அப்டேட்!

SHARE

வைஃபை வேகத்தை கனெக்ட் செய்வதற்கு முன்னரே கண்டறியும் வசதியை கூகுள் நிறுவனம் புதிய 8.1 ஓரியோ அப்டேட்டில் வழங்கி உள்ளது.

ஆன்ட்ராய்டு பயன்படுத்தும் நபர்களுக்குத் தொடர்ந்து புதுமையான அப்டேட்களை வழங்கிவரும் கூகுள் நிறுவனம் அதன் புதிய ஓரியோ ஓஎஸ்-ல் அப்டேட் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி பயனர்கள் வைஃபை நெட்வொர்க்கில் கனெக்ட் செய்வதற்கு முன்னர் அதன் வேகம் குறித்த தகவல்களை அறிந்து தேவையான வைஃபையைத் தேர்வு செய்யும் வசதியை வெளியிட்டுள்ளது.

அதில் slow (under 1Mbps), OK (1-5Mbps), fast (5-20Mbps) மற்றும் "very fast" (20Mbps) என வைஃபையின் வேகத்தை வைத்து பயனர்களுக்கு தகவல்களை காண்பிக்க அப்டேட் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் வேகமாகச் செயல்படும் நெட்வொர்க்களை எளிதில் கண்டறிந்து அதில் பயனர்கள் தங்களின் ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப்களில் இணைத்துக்கொண்டு பயன்படுத்தலாம். இந்த அப்டேட் தற்போது புதிய ஓஎஸ்-ஆன ஓரியோவில் மட்டும் வெளியாகியுள்ள நிலையில் மற்ற வெர்ஷன்கள் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த அப்டேட் வெளியாகுமா என்பது குறித்த தகவல்களை கூகுள் நிறுவனம் வெளியிடவில்லை.

சுமார் 10 சதவிகிதத்திற்கும் குறைவான பயனர்களே ஓரியோ வசதி கொண்ட ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்திவரும் நிலையில், பிற பயன்களின் பயன்பாட்டினைக் கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம் இந்த அப்டேட்களை மேலும் சில வெர்ஷன்களுக்கு வழங்க வாய்ப்புள்ளது.
SHARE