Wednesday, January 24, 2018

லிந்துலையில் லொறி விபத்து: மயிரிழையில் உயிர்தப்பிய சாரதி! (Video)

SHARE

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் ஏற்பட்ட கோர விபத்தில், லொறி சாரதி ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

தேயிலை தொழிற்சாலை ஒன்றில் தேயிலை தூள் பக்கட்களை ஏற்றி வருவதற்காக தலவாக்கலை பகுதியிலிருந்து லிந்துலை பகுதிக்கு சென்ற லொறியே நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு லிந்துலை லோகி தோட்ட தொழிற்சாலைக்கு அருகாமையில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

எதிரே வந்த மோட்டர் சைக்கிள் ஒன்றுக்கு இடமளிக்கும் போது வாகன சாரதிக்கு குறித்த வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




SHARE