Saturday, March 24, 2018

இன்றைய ராசிபலன் - 24.03.2018

SHARE

மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.




ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப் பம் விலகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வியாபாரம், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.




மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனஉளைச்சல் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். உங்கள் வாயை சிலர் கிளறி வேடிக்கைப் பார்ப்பார்கள். அதிகம் பேச வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அலைக்கழிக்கப்படுவீர்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.




கடகம்: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியா பாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.




சிம்மம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். சகோதர வகையில் பயனடைவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரம் செழிக்கும். முயற்சியால் முன்னேறும் நாள்.




கன்னி: உங்களின் அணுகுமுறையை மற்ற வர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள் வீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதிக்கும் நாள்.




துலாம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. தடைகள் உடைபடும் நாள்.




விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களைக் குறைக் கூற வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.




தனுசு: உங்களுடைய அறிவா ற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். தாயார் ஆதரித்துப் பேசுவார். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.




மகரம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களை க்கட்டும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தொட்டது துலங்கும் நாள்.




கும்பம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.




மீனம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.


    
SHARE