Monday, March 26, 2018

குடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும் சில எளிய வைத்தியங்கள்!

SHARE


தொடர்ந்து மாசடைந்த சுற்றுச்சூழலில் வாழ்ந்து வந்தால், ஒருவரது உடலில் எளிதில் புழுக்கள் நுழைந்துவிடும்.

அப்படி நுழையும் புழுக்கள் குடலை தனது இருப்பிடமாக கொண்டு வாழ்ந்து வளர ஆரம்பிக்கும். மேலும் இவைகள் நாம் சாப்பிடும் உணவுகளை உட்கொண்டு, நமக்கு ஊட்டச்சத்துக் குறைபாடுகளையும் உண்டாக்கும். குடலில் வாழும் புழுக்களை அழிப்பதற்கு ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன.

தேங்காய்:

தேங்காய் குடலில் வாழும் புழுக்களை வெளியேற்றும் வலிமையான ஆன்டி-பாராசிடிக் பண்புகள் உள்ளன. இவை குடலில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்றிவிடும்.

தினமும் காலை உணவின் போது 1 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை சாப்பிடுங்கள். தேங்காய் சாப்பிட்ட 3 மணிநேரத்திற்கு பின், 375 மிலி பாலில் 30 மிலி விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து குடியுங்கள்.

பப்பாளி:

ஆயுர்வேதத்தில் குடல் புழுக்களை அழிக்க பப்பாளி பயன்படுத்தப்படுகிறது. இதற்கு பப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் முக்கியமான நொதிப் பொருள் தான் காரணம்.

பப்பாளிக் காயை துருவி சாறு எடுத்து, 1 டேபிள் ஸ்பூன் சாற்றில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் நீர் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

2 மணிநேரம் கழித்து, 250 மிலி பாலில் 30 மிலி விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்தால், விரைவில் வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்து வெளியேறும்.

கேரட்:

கேரட்டுகளில் உள்ள பீட்டா-கரோட்டின், உடலில் இருந்து புழுக்களை வெளியேற்றும். இதில் உள்ள வைட்டமின் ஏ, புழு முட்டைகளை கரையச் செய்துவிடும். மேலும் கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் போன்றவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க உதவும்.

கிராம்பு:

கிராம்பில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் புழுக்களை அழிக்கும் பண்புகள் ஏராளமாக உள்ளது. இது வயிற்றில் உள்ள புழு முட்டைகளை அழிக்க உதவுவதோடு, உடலில் இருந்து அந்த புழுக்களையும் வெளியேற்றும்.

உங்கள் உணவுகளில் கிராம்பு பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், ஒரு கிராம்பை தினமும் வாயில் போட்டு மென்று விழுங்குங்கள்.
SHARE