Thursday, March 22, 2018

அரசின் மீது நம்பிக்கையில்லை: ஹுசைன் இலங்­கைக்கு எச்­ச­ரிக்கை!

SHARE


பொறுப்­புக்­கூறல் பொறி­முறை வேண்டும்
இன­வாத தாக்­கு­தல்கள் நிறுத்­தப்­பட வேண்டும்
காணிகள் விடு­விக்­கப்­ப­டு­வது மிக முக்­கியம்
ஐ.நா.வின் கண்­கா­ணிப்பு தொடர்­வது அவ­சியம்

சர்­வதேச பங்­க­ளிப்­புடன் விசேட நீதி­மன்றம் ஒன்றை நிறுவி மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும்.

இந்த நட­வ­டிக்கை முன்­னெ­டுக்கப்­ப­டா­விடின் சர்­வ­தேச நியா­யா­திக் கம் என்ற மாற்­று­வ­ழியை ஆரா­யு­மாறு உறுப்­பு­நா­டு­களை கோருவோம் என்று ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசென் தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன் அண்­மையில் இலங்­கையில் இடம்­பெற்ற சிறு­பான்மை மக்கள் மீதான இன ரீதி­யான தாக்­குதல் குறித்து நாம் கவலை அடை­கிறோம் என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நேற்று (21.03.2018) நடை­பெற்ற இலங்கை ஜெனிவா பிரே­ர­ணையை எவ்­வாறு அமுல்­ப­டுத்­தி­யது என்­பது குறித்த விவா­தத்­தின்­போது செய்ட் அல் ஹுசேன் வெளி­யிட்ட அறிக்­கை­யி­லேயே இந்த விட­யங்­களை குறிப்­பிட்­டுள்ளார். செய்ட் அல் ஹுசேன் நேற்­றைய விவா­தத்தில் கலந்­து­கொள்­ளாத நிலையில் பிரதி மனித உரிமை ஆணை­யாளர் அறிக்­கையை வெ ளியிட்டார்
SHARE