Thursday, March 22, 2018

மீண்டும் விஜய் சேதுபதியுடன் அஞ்சலி!

SHARE

‘இறைவி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ் சினிமாவுலகில் தொடர்ச்சியாகப் பல படங்களில் பிஸியாக நடித்துவருபவர் விஜய் சேதுபதி. புதுமையை விரும்பும் நடிகர்களுள் ஒருவராக இருக்கும் விஜய் சேதுபதி தன்னுடைய ஒவ்வொரு படங்களுக்கும் மாறுபட்ட தோற்றங்களை வெளிப்படுத்தி வருகிறார். ஜுங்கா, சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், செக்க சிவந்த வானம் என அடுத்தடுத்து படங்களில் நடித்துவருகிறார்.

இந்த நிலையில் ‘பண்ணையாரும் பத்மினியும்' படத்தை இயக்கிய அருண்குமாருடன் மீண்டும் இணைந்திருக்கிறார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தை கே புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜராஜன் தயாரிக்கவிருக்கிறார். இவர் பாகுபலி திரைப்படத்தின் தமிழக விநியோகஸ்தர்.

இறைவி படத்துக்குப் பிறகு மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்துள்ளார் அஞ்சலி. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘டார்லிங்’ விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு தமிழகத்திலும் மலேசியாவிலும் நடைபெறவிருக்கிறது.
SHARE