தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமைப் பணிமனை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனால் இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அரசியல், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டு இயக்கமாகத் தொழிற்பட்டுவரும் அரசடி வீதி கந்தர்மடத்தில் அமைந்துள்ள தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமைப் பணிமனையே யாழ்ப்பாணத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் வட.மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், ம.தியாகராஜா ஆகியோரும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.