Wednesday, March 28, 2018

ஸ்டீவன் சுமித், வார்னருக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை!

SHARE

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ராயல் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ஸ்டீவன் ஸ்மித் நேற்று முன் தினம் திங்கட்கிழமைஅந்த பதவியில் இருந்து நீக்கப்பட்ட்டார். அவருக்கு பதிலாக தற்போது ரஹானே அந்த அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்

சன் ரைசஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து வார்னரும் சற்றுமுன் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சன்ரைசஸ் அணியின் கேப்டனாக தவான் பொறுப்பேற்கவுள்ளார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்திய விசாரணை முடிவில் ஸ்டீவன் சுமித்துக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீத அபராதமும், ஒரு டெஸ்டில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது. பான்கிராப்டுக்கு போட்டி கட்டணத்தில் 75 சதவீதம் அபராதத்துடன், 3 தகுதி இழப்பு புள்ளியும் அளிக்கப்பட்டது.

ஓராண்டு தடை
இந்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை விதித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. பந்தை சேதப்படுத்திய பென்கிராப்டுக்கு 9 மாதங்கள் கிரிக்கெட் விளையாட கிரிக்கெட் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டதன் மூலம்,  இரு முன்னணி வீரர்களும் சொந்த மண்ணில் டிசம்பர், ஜனவரி மாதம் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாட முடியாது. முன்னதாக, ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோரை உடனடியாக தாயகம் திரும்ப அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சதர்லாண்ட் நேற்றிரவு  செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
SHARE