Saturday, March 31, 2018

டோனியிடம் கற்கிறேன்: சென்னை அணியை சேர்ந்த தமிழக வீரர் பேட்டி!

SHARE


துடுப்பாட்ட நுணுக்கங்களை ஹஸ்சியிடமும், விக்கெட் கீப்பிங்கை டோனியிடமும் கற்றுக்கொள்கிறேன் என்று சென்னை அணி வீரர் ஜெகதீசன் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டவர் ஜெகதீசன் (22)

கோவையை சேர்ந்த இவர் விக்கெட் கீப்பராவார். ஜெகதீசன் அளித்துள்ள பேட்டியில், துடுப்பாட்ட பயிற்சியாளர் மைக் ஹஸ்சியை சந்தித்து பேசுவது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

பந்துவீச்சாளரை மிரள வைக்கும் வகையில் எப்படி பேட்டிங் தாக்குதலை கையாள்வது என்பதை சொல்லி தருகிறார். அவரிடம் இருந்து நிறைய விடயங்களை கற்றுக்கொள்கிறேன்.

விக்கெட் கீப்பிங்கை பொறுத்தவரை தலைவர் டோனியிடம் பயிற்சியின் போது பல்வேறு விடயங்களை விவாதித்து கற்றுக்கொள்கிறேன். சூழ்நிலைக்கு தகுந்தபடி எப்படி கீப்பிங் மற்றும் பேட்டிங் செய்வது என்பதையும் அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன் என கூறியுள்ளார்.
SHARE