Saturday, March 31, 2018

நாகினி ஆட்டம் முதல் ஸ்மித் தடை வரை! பல அதிரடிகளை ஏற்படுத்திய மார்ச் மாதம்!

SHARE

கிரிக்கெட் உலகில் இந்த ஆண்டு மார்ச் மாதம், அனைவரும் எளிதில் கடந்து செல்ல முடியாத படி அமைந்துள்ளது.
அத்தனை, அத்தனை திருப்பங்கள், அதிரடி மாற்றங்கள் என சுவாரஸ்ய நிகழ்வுகளுக்கு பஞ்சமில்லாமல் கடந்த இந்த மாதத்தை ஒரு தொகுப்பாக காணலாம்.

பீட்டர்சன் ஓய்வு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த பீட்டர்சன், 2018 இறுதியில் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அடுத்த உலகக் கோப்பை போட்டியில் விளையாட மாட்டேன் என பீட்டர்சன் திட்டவிட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மனைவி குறித்து

அவுஸ்திரேலியா- தென்னாப்ரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டியின் உணவு இடைவெளியில் வீரர்கள் அறைக்கு திரும்பிய போது, வார்னரின் மனைவி குறித்து குயிண்டன் டி காக் திட்டியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த விவகாரம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி, உலகம் முழுவதும் வைரலாக பரவியது.

உலகக்கோப்பை தகுதி

உலகக்கோப்பை போட்டிகளுக்கான தகுதிச்சுற்றில் ஆப்கானிஸ்தான் அணி கடினப்பட்டு தெரிவாகியது. உலகின் மிகவும் இளம்வயது கேப்டனான ரஷீத் அந்த அணியை சிறப்பாக வழிநடத்தி சாதித்திருந்தார்.

நாகினி ஆட்டம்

இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு நிதாஹஸ் கோப்பை போட்டியில் வங்கதேச வீரர்கள் ஆடிய நாகினி ஆட்டமும் உலக அளவில் வைரலானது. வங்கதேச வீரர்கள் ஆடிய அந்த கொமெடி ஆட்டத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

தினேஷ் கார்த்திக் அடித்த சிக்ஸர்

நிதாஹஸ் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்திற்கு எதிராக இறுதி பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார் தினேஷ் கார்த்திக். இதன்மூலம் 14 வருடங்களில் பெறாத அந்த புகழை ஒரே இரவில் பெற்றார் என்பது கூடுதல் சிறப்பு.

தடை

தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக அவுஸ்திரேலிய அணி விளையாடிவரும் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் ஸ்மித், கேமரூன் இருவரும் உப்புத்தாள் வைத்து பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கினர்.
பந்து நன்றாக சுழல் வேண்டும் என அவர்கள் செய்த இந்த செயல் கெமராவில் பதிவாகியதையடுத்து ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஒரு வருட தடையும், கேமரூனுக்கு 9 மாத தடையும் விதிக்கப்பட்டது.
SHARE