Monday, March 26, 2018

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் :மூவர் படுகாயம்!

SHARE

தலவாக்கலை – டெவோன் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இன்று (திங்கட்கிழமை) காலை 7.30 மணியளவில் நேருக்கு நேர் மோதியதில் மூவர் படுகாயமடைந்தனர்.

ஹட்டன் – நுவரெலியா ஏ -7 பிரதான வீதியில், ஹட்டன் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, தலவாக்கலை நோக்கிச் சென்ற மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

படுகாயமடைந்த மூவரும் கொட்டகலை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு, அதில் இரண்டு பேர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் தலவாக்கலையிலிருந்து ஹட்டனை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் தவறான பக்கத்தில் செலுத்தப்பட்டதனாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


SHARE