Friday, March 23, 2018

குழந்தையுடன் தேர்வு எழுதிய பெண்!

SHARE

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் இரண்டு மாத கைக்குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு தோ்வெழுதும் புகைப்படம் சமூக வலைதளங்களில் உலகம் முழுவதும் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாள்களுக்கு முன் பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் ஜஹான் டாப் (25) என்ற பெண் தேர்வு எழுதினார். இவருக்கு இரண்டு மாத கைக்குழந்தை உள்ளது. இவர் தேர்வு எழுதிக்கொண்டிருக்கும்போது இவரது குழந்தை அழுதுள்ளது.

இதையடுத்து, நாற்காலியில் இருந்து இறங்கி தரையில் உட்கார்ந்துகொண்டு அழுத குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு தேர்வு எழுத ஆரம்பித்தார். தோ்வு அறை கண்காணிப்பாளர் அப்பெண்ணைப் புகைப்படம் எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும், அப்பெண்ணுக்கு வாழ்த்துகளும் குவிந்துவருகின்றன.

ஜஹான் டாப் ஒரு விவசாயியை மணந்துகொண்டார். இவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். தனது கிராமத்திலிருந்து ஆறு முதல் எட்டு மணி நேரம் பயணம் செய்து தேர்வு எழுதச் செல்கிறார். இதற்கு முன்பு எழுதிய தேர்வில் 150 புள்ளிகள் பெற்று, சமூக அறிவியல் ஆசிரியராக விரும்புகிறார். தேர்வு எழுதத் தேவையான பணம் இல்லாததால் கவலையாக உள்ளார்.
SHARE