Wednesday, March 28, 2018

விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்த மெர்சல் தயாரிப்பு நிறுவனம்!

SHARE



கடந்த தீபாவளியன்று தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் எங்கள் நிறுவனத்திற்கு பெருமையான திரைப்படம் என அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ்  தெரிவித்துள்ளது.
 
இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'மெர்சல்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ரூ.200 கோடி வசூல் சாதனை செய்தது. இந்த படம் தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது.
m
 
ஆனால், விமர்சகர்கள் அட்லீ படத்தின் பட்ஜெட்டை தாண்டி அதிகமாக செலவு செய்ததால். இந்த படம் தயாரிப்பு நிறுவனத்துக்கு தோல்வி படம் என கூறினர்.
 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், மெர்சல் படம் எங்க்ளுக்கு பெருமை என்றும், தளபதி விஜய்யுடன் பணிபுரிந்தது மிகவும் பெருமையாக உள்ளது என்றும் பதிவிட்டுள்ளார். 
SHARE