Monday, April 2, 2018

முதன்முறையாக மலையாளத்தில் அனுஷ்கா!

SHARE

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் அனுஷ்கா, முதல் முறையாக மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

‘பாகுபலி’ படத்துக்குப் பின் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகிவிட்டார் அனுஷ்கா. அந்த படத்திற்குப் பிறகு பிரதான கதாபாத்திரத்தில் நடித்த பாகமதி படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. எண்ணிக்கையில் குறைவான படங்களிலே நடித்தாலும் கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு சினிமாவுலகில் நடித்துவந்த அனுஷ்கா அடுத்ததாக மலையாள நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தை இயக்குநர் சரத் சந்திப் இயக்கவுள்ளார். இது குறித்தான தகவலையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உறுதிபடுத்தியுள்ளார்.

இதன் படப்பிடிப்பு நாளை முதல் துவங்கவிருக்கிறது. சரத் சந்திப், இதற்கு முன் ‘பரோல்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE