Tuesday, April 3, 2018

சீயான் விக்ரம் ஜோடியாகும் கமல்ஹாசனின் மகள்!

SHARE


கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சரா ஏற்கனவே அஜித்தின் 'விவேகம்' படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது அவர் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

விக்ரம் தற்போது கவுதம்மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம்' மற்றும் ஹரி இயக்கத்தில் 'சாமி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த இரண்டு படங்களை அடுத்து அவர் கமல்ஹாசனின் தயாரிப்பில் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன் நாயகியாக நடிக்கவுள்ளார். இதுகுறித்த அதிகார்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரவுள்ளது.
SHARE