Wednesday, May 23, 2018

வடக்கு மாகாணம் முழுவதும் சனி, ஞாயிறு மின்சார தடை!

SHARE

வடக்கு மாகாணம் முழுவதும் எதிர்வரும் 26 ஆம் திகதி சனி மற்றும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் காலை 8 முதல் 5 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வடக்குக்கான பிரதான மின் மார்க்கங்களான அநுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளின் அதியுயர் மின்னழுத்த மின்மாற்ற சீரமைப்பு வேலைகள் இடம்பெறவுள்ளதால் இத்தடை அமுலில் இருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
SHARE