Saturday, June 16, 2018

இன்றைய ராசிபலன் - 16.06.2018

SHARE
மேஷம்: முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.



ரிஷபம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.



மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நிம்மதியான நாள்.




கடகம்: ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைவாகப் பேச வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். பொறுமை தேவைப்படும் நாள்.






சிம்மம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் குறையும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.




கன்னி: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிலர் புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வேற்று மதத்தவர் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.




துலாம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக்கொள்வீர்கள். உறவினர்களுடன், புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சாதிக்கும் நாள்.



விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.






தனுசு: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.




மகரம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.




கும்பம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தொட்டது துலங்கும் நாள்.






மீனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
SHARE