Friday, June 29, 2018

இன்றைய ராசிபலன் - 29.06.2018

SHARE

மேஷம்: உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.




ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.




மிதுனம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாரின் உடல் நிலை சீராகும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். 




கடகம்: சாதுர்யமாகவும், சமயோஜிதமாகவும் பேசி சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வீட்டை புதுப்பிப்பது குறித்து யோசிப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அமோகமான நாள்.




சிம்மம்: சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் குறையும். புது நட்பு மலரும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். கனவு நனவாகும் நாள்.    




கன்னி: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.




துலாம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.  



விருச்சிகம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங் களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.




தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை குறையு ங்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.  எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.   




மகரம்: ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். விட்டு’ கொடுத்து போக வேண்டிய நாள்.




கும்பம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீ ர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். இனிமையான நாள்.





மீனம்: உங்களின் அணுகுமுறையை மற்றவ ர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.
SHARE