Saturday, June 16, 2018

நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்ட புனித நோன்பு பெருநாள்!

SHARE

நாடுமுழுவதும் முஸ்லிம் மக்கள் இன்று (சனிக்கிழமை) புனித நோன்பு பெருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் புத்தளம், வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், காத்தான்குடி மற்றும் மலையகத்தில் பள்ளிவாசல்கள் மற்றும் தக்கியாக்களில் இன்று காலை பெருநாள் விஷேடத் தொழுகை இடம்பெற்றது.




இதன்போது முஸ்ஸிம் குறித்த பிரதேசங்களில் நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து கொண்டு நோன்பு தொழுகையும் பிரார்த்தனையும் சிறப்பித்தனர்.

தொழுகையின் பின்னர் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துச் செய்திகளை பரிமாரிக் கொண்டதுடன் நோன்பு கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
SHARE