Tuesday, June 19, 2018

வலி.வடக்கில் இராணுவத்தின் வசமிருந்த ஞான வைரவர் ஆலயம் விடுவிப்பு!

SHARE

வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுவிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் இவ்வாலயத்தில் வைரவர் மடை, விசாகப் பொங்கல் இடம்பெறும் போது அன்றைய தினம் மட்டும் மக்கள் செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதித்திருந்தனர்.

இந்நிலையில் ஆலயக்குருக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதியிடம் இக்கோயிலினை விடுவித்து தருமாறு கோரியிருந்த நிலையிலேயே இக்கோயில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.




வலிகாமம் வடக்கில் நேற்று விடுவிக்கப்பட்ட 60 ஏக்கர் நிலப்பரப்பிற்குள் வயாவிளான் ஞானவைரவர் ஆலயமும் உள்ளடங்கிய நிலையில் இன்றே குறித்த ஆலயப் பிரதேசத்திற்குள் செல்ல இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர்.

மேலும் இப்பகுதியில் முகாம்கள் மற்றும் முட்கம்பி வேலிகளை அகற்றி வருவதால் நாளை அல்லது நாளை மறுதினம் மக்கள் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் செல்ல முடியும் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
















SHARE