Saturday, June 16, 2018

முன்னாள் போராளியின் பரிதாப நிலை! காப்பாற்றுமாறு தாய் கோரிக்கை!

SHARE

மட்டக்களப்பு கரவெட்டியாறு கிராமத்தில் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் இருக்கும் முன்னாள் போராளியான 48 வயது டைய திலீபன் என்கிற வடிவேல் தில்லையம்பலதிற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கையெடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

குறித்த போராளியின் வீட்டுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அவரின் நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது தன்னால் முடிந்த உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கையெடுப்பதாகவும் இதன்போது உறுதியளித்தார்.




இந்த முன்னாள் போராளியின் தந்தையும் நடக்க முடியாத சூழலில் இருக்கும் நிலையில், இவரை ஒரு வயோதிப தாயாரே கவனித்து வருகின்றார்.

இவருடைய பிரச்சினைகள் தொடர்பில் வயோதிப தாயார் கூறிய போது,

இவரை வைத்திய சாலைக்கு கொண்டு பராமரிக்க ஒருவரும் இல்லாத நிலையில் இவர் தொடர்ந்தும் படுத்த படுக்கையாக உள்ளார். இவருக்கு சக்கர நாற்காலி மற்றும் மலசலகூட வசதிகள் எதுவும் இன்றி வருகின்றார்.

1990 ஆம் ஆண்டு தனது சிறு வயதில் புத்தகப்பையை தூக்கி வீசிவிட்டு தனது இனத்திற்காக போராடச்சென்றவரே இவராகும்.ஆனால் அந்த இனம் இன்று அந்த குடும்பத்திற்கு என்ன செய்தது என்பது மிகவும் கவலைக்குரியதாகும்.




இவரது மூத்த மகனை இறுதி யுத்தத்தில் இழந்து தவிக்கும் இவர் தனது குடும்பத்தையும் பிரிந்து வாழ்கிறார். மேலும், இவரது அக்காவான விஜித்தா என்பவரின் பெயரிலேயே கரவெட்டியாறு விஜித்தா தமிழ் கலவன் பாடசாலை இயங்கி வந்துள்ளது.

மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் வைத்திய உதவிகள் இன்றி படுத்த படுக்கையாக இருக்கும் திலீபனை காப்பாற்றி அவருக்கு மறுவாழ்வளிக்க முன்வருமாறு புலம்பெயர் அமைப்புக்களுக்கும் தமிழ் உணர்வாளர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக அவராய் பராமரித்து வரும் தாய் தெரிவித்துள்ளார்.
SHARE