Sunday, June 17, 2018

யாழில் பதற்றத்தின் பின்னணி: பொலிஸ் அதிகாரியை கைது செய்ய உத்தரவு!

SHARE

யாழ் மல்லாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொலிஸார் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் கொல்லப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த மல்லாகம் மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், நேரில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.




இதன்போது இச் சம்பவம் தொடர்பில் பொது மக்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி, துப்பாக்கிச் சூட்டை நடத்திய சுன்னாகம் பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்ய உத்தரவிட்டார்.

அத்துடன், சடலத்தையும் நேரில் விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE