Monday, June 18, 2018

வடக்கில் இராணுவ வசமிருந்த ஐம்பது வீதமான காணிகளே விடுவிப்பு: யாழ். மேயர்!

SHARE

வடக்கில் இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்திருந்த காணிகளில்  ஐம்பது வீதமானவையே   விடுவிக்கப்படாதுள்ளதாக யாழ். மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனோர்ல்ட் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயிர்ஸ்தானிகருடன் இன்று (திங்கட்கிழமை) யாழ். மாநகரச சபையில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பை அடுத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ”நான் மாநகர முதல்வராக, பதவியேற்ற பின்னர் சந்திக்க வேண்டுமென ஆர்வம் கொண்டமையினால் இந்த சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பின் போது, பல விடயங்கள் பேசப்பட்டன. அதில் 3 விடயங்கள் முக்கியமாக பேசப்பட்டன.




மாநகச சபை முதல்வராக பொறுப்பேற்றபின்னர் சாதிக்க கூடியதாக இருக்கின்றதாக என்றும், மாகாண சபை மக்களுக்கான தேவைகளை சரியான முறையில் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக் காணப்படுகின்றதாகவும், அவை உண்மையா என்றும் உயர்ஸ்தானிகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மாகாண சபை அபிவிருத்தி திட்டங்களை செய்யத் தவறியதை ஒப்புக்கொண்டுள்ளார். அத்துடன், கட்சி ரீதியாக வேறுபட்டிருந்தாலும் சகல உறுப்பினர்களையும் இணைத்து மிக ஒற்றுமையுடன், அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்கின்றோம்.

கட்சி வேறுபாடுகள் சகல மக்களின் வாழ்க்கை தரத்தினையும் அபிவிருத்தியையும் முன்னெடுப்பதற்கு அனைவரும் ஒரே எண்ணப்பாட்டினைக் கொண்டிருப்பதுடன், புதிய சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கு வெளிநாட்டு நிதிகளையும், ஏனைய நலன்விரும்பிகளின் நிதிகளையும் எதிர்பார்த்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மாகாண சபை உறுப்பினராக இருந்து மாநகர சபைக்கு வருகை தந்துள்ளதுடன், பல சவால்களை எதிர்நோக்கியிருப்பீர்கள்.அத்துடன், மாகாண சபையின் பல குறைபாடுகள் தொடர்பிலும், ஆராய்ந்தார்.

எமது மக்கள் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைய முடியாமல் இருக்கின்றார்கள்.பொருளாதாரத்தினை ஈட்டிக்கொள்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கவில்லை.




நாட்டில் உள்ள பொருளாதார சூழல், வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள முடியாத சூழல் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி, புதிய வேலைவாய்ப்பினை வழங்க முடியாத நிலை, அத்துடன், மக்களுக்குத் தெரிந்த தொழில்களை மேம்படுத்த சந்தைவாய்ப்புக்கள் ஏற்படுத்திக்கொடுக்க முடியாத சூழ்நிலை. அவ்வாறான காரணங்களினால், எமது மக்கள் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைய முடியாத நிலை காணப்படுகின்றது” என தெரிவித்துள்ளார்.
SHARE