Tuesday, June 12, 2018

புதூர் நாகதம்பிரான் பொங்கலில் காட்சியளித்த வெள்ளை நாகம்! (Photo,Video)

SHARE

வவுனியா, புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தின் போது வெள்ளை நாகம் காட்சி கொடுத்து பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வன்னி மண்ணின் புகழ்மிகு புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வு திங்கள்கிழமை இடம்பெற்றது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாகதம்பிரானின் அருளினைப் பெற்றார்கள்.





விசம் தீண்டியர்களுக்கு மருந்து வழங்கும் புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்றபோது இரவு வேளையில் அவ் ஆலயத்தின் வெள்ளை நாகம் தோன்றி பக்தர்களுக்கு அருள் பாலித்தது.

இதன்போது பக்தர்கள் பால், முட்டை போன்றவற்றை படைத்தும், அதனை புகைப்படம் எடுத்தும் மெய் சிலிர்க்க வழிபட்டனர். சில நிமிடங்கள் அங்கு காட்சி கொடுத்த வெள்ளை நாகம் பின்னர் அங்கிருந்து சென்று விட்டது.

இதன்போது அடியவர்கள் பக்தி பரவசத்தில் நாகத்தினை வழிபட்டனர்.










SHARE