Monday, June 25, 2018

யாழில். கழுத்தில் காயங்களுடன் ஆறு வயது சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு! (Video)

SHARE

சுழிபுரத்தில் பாடசாலை மாணவி ஒருவர் கழுத்தில் காயங்களுடன் கிணற்றிலிருந்து சடலாமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுழிபுரம் – காட்டுப்புலம் அ.த.க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவி சிவநேஸ்வரன் றெஜினா என்ற மாணவியே  அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.




குறித்த மாணவி இன்று பாடசாலை சென்றுவிட்டு 1.30 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அந்த நேரம் பெற்றோர், சகோதரர்கள் வீட்டில் இருக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் 2 மணியளவில் வீட்டுக்கு வந்த பெற்றோர் சிறுமியின் புத்தகப்பை வீட்டில் இருப்பதை பார்த்து சிறுமியை தேடியுள்ளனர்.

சிறுமி வீட்டிலோ அருகிலுள்ள வீடுகளிலோ காணாத நிலையில் 3.40 மணியளவில் வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமியின் கழுத்து நெரிக்கப்பட்ட அடையாளம் கழுத்தில் காணப்படுவதுடன் நெற்றியிலும் காயம் காணப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் இரவு 7.00 மணியளவில் சம்பவ இடத்திற்கு வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணகளை மேற்கொள்வதற்காக அப்பகுதியைச் சேர்ந்த 04 பேர் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.











SHARE