Monday, June 18, 2018

யாழ். வர்த்தகரின் கப்பலில் தீ பரவல் – மயிலிட்டியில் இன்று அதிகாலை சம்பவம்! (Video)

SHARE

யாழ்ப்பாணம்  - மயிலிட்டி துறைமுகத்துக்கு அருகில் கரை ஒதுங்கி நின்ற யாழ்ப்பாண வர்த்தகரின் சரக்குக் கப்பலில் இன்று அதிகாலை திடீரென தீபரவியதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் ஈஸ்வரபகவான் றேடிங் கம்பனியின் கப்பலே இவ்வாறு தீ விபத்துக்குள்ளாகி சேதமடைந்துள்ளது.

“இந்தியாவிலிருந்து மயிலிட்டி துறைமுகத்துக்கு ராம்கோ சிமெந்து ஏற்றிவரும் கிங்டம் (Hind – M) என்ற கப்பல் கடந்த ஒரு வருடத்துக்கு மேல் தொழிநுட்பக் கோலாறு காரணமாக மயிலிட்டிக் கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்தது.




அண்மையில் நங்கூரம் தளர்வடைந்து கப்பல் கரை ஒதுங்கி நின்றது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் கப்பலில் தீ பரவியுள்ளது என  கடற்படையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தையடுத்து கடற்படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடினர்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.









SHARE