Monday, July 9, 2018

வவுனியாவில் வாள்வெட்டு – 07 பேர் காயம் – 10 பேர் கைது!

SHARE

வவுனியாவில் போதையில் ஏற்பட்ட பல்வேறு வாள்வெட்டு மற்றும் மோதல் சம்பவங்களில் 7 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் இடம்பெற்ற இச்சம்பவங்கள் தொடர்பாக தெரிய வருவதாவது,

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் மாலை 7 மணியளவில் மது போதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் அப்பகுதியில் நின்றிருந்த இளைஞர்கள் மீது வாள் வீசி தாக்குதல் நடாத்தியதில் ஒருவர் படுகாயமடைந்தடி நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




இச்சம்பவம் தொடர்பாக பூந்தோட்டம், பெரியார்குளம் மற்றும் தோணிக்கல் பகுதிகளை சேர்ந்த 10 இளைஞர்களை வவுனியா குற்றதடுப்பு பொலிசார் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்களிடமிருந்து ஒரு வாள், கோடரி, கேபிள்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் என்பனவற்றை பொலிசார் மீட்டுள்ளனர்.

இதேவேளை, மதீனா நகர் பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் இருவர் காயமடைந்து வவுனியா வித்தியாசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். அத்துடன் நேற்றைய தினம் மது போதை காரணமாக ஏற்பட்ட மோதல் சம்பவங்களில் 7 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையின் விபத்துபிரிவில் அனுமதிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸ்நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE