Friday, July 13, 2018

இன்றைய ராசிபலன் - 13.07.2018

SHARE

மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.



ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். உற்சாகமான நாள்.




மிதுனம்: பிற்பகல் 3.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.




கடகம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரம் சுமாராக இருக்கும். பிற்பகல் 3.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.




சிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.




கன்னி: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.



துலாம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சாதிக்கும் நாள்.


விருச்சிகம்: பிற்பகல் 3.30 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உத்யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.




தனுசு: கணவன்-மனைவிக்குள் ஆரோக் யமான விவாதங்கள் வந்துப் போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள்-. உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். பிற்பகல் 3.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனம் தேவைப்படும் நாள்.




மகரம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளை களின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். தொட்டது துலங்கும் நாள்.




கும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.




மீனம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.
SHARE