Thursday, July 19, 2018

இன்றைய ராசிபலன் - 19.07.2018

SHARE

மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.




ரிஷபம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள்.  




மிதுனம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். உழைப்பால் உயரும் நாள்.      




கடகம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையை கண்டு மேலதிகாரி வியப்பார். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.




சிம்மம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகு, இளமைக் கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சி தங்கும் நாள்.




கன்னி: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்புகளையும் எந்த ஒப்படைக்காதீர்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட் களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.




துலாம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.




விருச்சிகம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்து கொள்வார். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து
உயரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.




தனுசு: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். ஆடை, ஆபரணம் சேரும். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சாதிக்கும் நாள்.




மகரம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். புதிய பாதை தெரியும் நாள்.




கும்பம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.




மீனம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நன்மை கிட்டும் நாள்.
SHARE